சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரராக ஒருவரை தேர்வு செய்து வருகிறது. அதன்படி அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரரை தேர்வு செய்ய பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா, தென் ஆப்பிரிக்காவின் குவிண்டன் டி காக் மற்றும் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை ரச்சின் ரவீந்திரா வென்றுள்ளார். நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், அதிரடியாக விளையாடி வரும் ரச்சின் ரவீந்திரா, தனது அறிமுக தொடரிலேயே 3 சதங்கள் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஐசிசியின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹேலி மேத்யூஸ், வங்கதேசத்தின் நஹிடா அக்டர் மற்றும் நியூசிலாந்தின் அமெலியா கெர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதில், சிறந்த வீராங்கனைக்கான விருதை வெஸ்ட் இண்டீசின் ஹேலி மேத்யூஸ் வென்றுள்ளார்.
0 Comments