தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (டிபிஐஐடி) சிறப்புச் செயலாளர் (லாஜிஸ்டிக்ஸ்) திருமதி சுமிதா தவ்ரா தலைமையில் 60-வது கட்டமைப்பு திட்டமிடல் குழு (என்பிஜி) கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தனிப்பட்ட அமைச்சகங்கள் / துறைகளின் திறன்வாய்ந்த சரக்குப் போக்குவரத்துக்கான துறைசார் திட்டம் (எஸ்.பி.இ.எல்) குறித்து விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தேசிய சரக்குப்போக்குவரத்துக் கொள்கையின் (என்.எல்.பி) விரிவான செயல் திட்டத்தின் (சி.எல்.ஏ.பி) கீழ் முன்மொழியப்பட்ட பல்வேறு முன்முயற்சிகளில், இது துறை ரீதியான தேவைகளை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் அணுகுமுறையாகும்.
இந்தக் கூட்டத்தில் எஃகு அமைச்சகம், நிலக்கரி அமைச்சகம் ஆகியவை சரக்குப் போக்குவரத்து சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்கான தங்கள் திட்டங்களை முன்வைத்தன.
நிலக்கரி போக்குவரத்துக் கொள்கை 2023-ன் கீழ் தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த நிலக்கரி விநியோகத் திட்டம் குறித்த தனது முக்கிய ஆய்வுகளை நிலக்கரி அமைச்சகம் சமர்ப்பித்தது.
0 Comments