சுதந்திர இந்தியாவில் 1989-90 காலக்கட்டத்தில் பிரதமராக பதவி வகித்தவர் வி.பி.சிங். கடந்த 2008-ம் ஆண்டு இவர் மரமடைந்தார். தான் பதவியில் இருந்த காலக்கட்டத்தில் காவிரி நதிநீர் தீப்பாயம், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, 27 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்தது, உள்ளிட்ட பல வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை கொடுத்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களை கவுரவிக்கும் விதமாக தமிழகத்தின் சார்பில் சென்னை மாநில கல்லூரியில் வி.பி.சிங் திருவுருவ 52 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. வி.பி.சிங் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த சிலை திறக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் ஆகிய இருவரும் வி.பி.சிங் திருவுருவ சிலையை திறந்து வைத்தனர். 600 கிலோ எடை, சுமார் 8.5 அடி உயர பீடத்தில், 9.5 அடி உயரம் கொண்டதாக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அமைந்துள்ள கல்வெட்டில் வி.பி.சிங்கின் கருத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
0 Comments