Recent Post

6/recent/ticker-posts

இந்திய ராணுவத்திற்கு 10 ஆண்டுகளுக்கு எலக்ட்ரானிக் ஃப்யூஸ்களை வாங்க பெல் நிறுவனத்துடன் ரூ.5,336.25 கோடிக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் / Ministry of Defense signs Rs 5,336.25 crore deal with BHEL for 10-year supply of electronic fuses for Indian Army

பாதுகாப்பு அமைச்சகம், 2023, டிசம்பர் 15 அன்று, புனேவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் (பெல்) 10 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ .5,336.25 கோடி செலவில் மின்னணு ஃப்யூஸ்களை வாங்குவதற்கான முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 

'தற்சார்பு இந்தியா' தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாக, 10 ஆண்டு கால நீண்டகாலத் தேவைக்கான அரசின் முன்முயற்சியாக 'இந்திய தொழில்துறையால் இந்திய ராணுவத்திற்கான வெடிமருந்துகள் தயாரிப்பின்' கீழ் வெடிமருந்து கொள்முதல் செய்வதற்கான இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. 

இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும், வெடிமருந்து உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கும், முக்கியமான தொழில்நுட்பங்களைப் பெறுவதற்கும், விநியோகச் சங்கிலித் தடையால் பாதிக்கப்பட்டுள்ள பொருட்களைப் பாதுகாப்பதற்கும் வெடிமருந்து கையிருப்பை உருவாக்குவதுமே இத்திட்டத்தின் நோக்கமாகும் .

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel