இந்திய கடற்படையின் மும்பை கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் ரகசியமாக ஊடுருவும் ஸ்டெல்த் தொழில்நுட்ப வழிகாட்டுதலுடன் கட்டமைக்கப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பல் பணியில் ஈடுபடுவதற்கு தயார் நிலையில் உள்ளது.
இந்தக் கப்பலை 2023 டிசம்பர் 26 அன்று பாதுகாப்பு துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த நிகழ்வின் மூலம் மொத்தம் உள்ள நான்கு ‘விசாகப்பட்டினம் கிளாஸ்’ அழித்தொழிப்பு போர்க் கப்பல்களில் மூன்றாவது கப்பல் நாளை மறுநாள் கடற்படையில் முறையாக இணைக்கப்பட உள்ளது.
இந்தப் போர்க்கப்பல் முழுக்க, முழுக்க இந்தியக் கடற்படையின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டது. இந்த வடிவமைப்பின் அடிப்படையில் மும்பையின் மசாகன் டாக் நிறுவனத்தின் மூலம் கப்பல் கட்டப்பட்டது.
0 Comments