பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.19,150 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
சுமார் ரூ.10,900 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பண்டிட் தீனதயாள் உபாத்யாய் நகர்-நியூ பாவ்பூர் பிரத்யேக சரக்கு வழித்தடம் உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும்.
வாராணசி-தில்லி இடையேயான 2-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
செவ்வாய் கிழமை தவிர, வாரத்தின் அனைத்து நாள்களிலும் இந்த ரயில் வாராணசியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 2:05 மணிக்கு புதுதில்லி சென்றடையும். பின்னர் மறுமார்க்கமாக மதியம் 3 மணிக்கு தில்லியிலிருந்து கிளம்பி வாராணசிக்கு இரவு 11:05 மணிக்கு வந்தடைகிறது.
0 Comments