ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபையில் ஐ.நா.வின் 28-ஆவது பருவநிலை பாதுகாப்பு மாநாடு கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்தது. இதன் முடிவில் எரிசக்திக்காக நிலக்கரி பயன்பாட்டைக் குறைக்க வலியுறுத்தும் சா்வதேச ஒப்பந்தம் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்ஷியஷுக்குள் கட்டுப்படுத்தும் வகையில் பசுமைஇல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும், இதற்காக புதைபடிம எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது உள்பட 8 அம்ச திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிசக்திக்காக நிலக்கரியைப் பெருமளவில் பயன்படுத்தும் நாடுகளான இந்தியா, சீனாவுக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.
0 Comments