சி.ஓ.பி., 28 எனப்படும் ஐ.நா.,வின் பருவநிலை உச்சி மாநாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) நடக்கிறது. இதில், யுஏஇ அதிபர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி துபாய் சென்றுள்ளார்.
இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, 2028ல் பருவநிலை உச்சி மாநாட்டினை இந்தியாவில் நடத்தும் திட்டத்தினை முன்மொழிந்தார். பிரதமருக்கு கவுரவம் இந்த மாநாட்டில் துவக்க உரை நிகழ்த்தும்படி பிரதமர் மோடிக்கு, யுஏஇ சார்பில் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஐ.நா சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வருகிறது. Conference of the Parties (COP) என்பது 1992-ம் ஆண்டு ஐ.நா சபையில் காலநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் உச்சி மாநாட்டை குறிப்பதாகும்.
துபாயில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா சபையின் 28-வது உச்சி மாநாடு COP28 என அழைக்கப்படுகிறது. நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 12-ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது.
இதில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், அமைப்புகள் கலந்து கொள்கின்றன. புவி வெப்ப நிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கை எட்டுவது குறித்து ஆராய்வதை இந்த உச்சி மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
0 Comments