கடந்த மாத ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'நவம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,67,929 கோடியாக உள்ளது.
இதில் சிஜிஎஸ்டி ரூ.30,420 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.38,226 கோடி, ஐஜிஎஸ்டி (இறக்குமதி மீதான ரூ.39,198 கோடி சேர்த்து) ரூ.87,009 கோடி மற்றும் செஸ் வரி (இறக்குமதி மீதான ரூ.1,036 கோடி சேர்த்து) ரூ.12,274 கோடி வசூலானது,' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.72 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே கால கட்டத்தில் ரூ.1.45 லட்சம் கோடியாக இருந்ததுடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் உயர்ந்து ரூ.1.68 கோடியாக வசூலாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments