ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு சட்டம், மாநில அரசு பதவிகளில் நியமனம் மற்றும் தொழில்முறை நிறுவனங்களில் சேர்க்கை, சில இட ஒதுக்கீடு பிரிவுகளுக்கு இடஒதுக்கீடு வழங்குகிறது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு தொழில் நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம்-2019, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
இந்த மசோதா ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டப் பேரவையின் மொத்த இடங்களின் எண்ணிக்கையை 83ல் இருந்து 90 ஆக அதிகரிக்கிறது. மேலும் இது ஏழு இடங்களை பட்டியலிடப்பட்ட சாதியினருக்கும், ஒன்பது இடங்களை பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கும் ஒதுக்குகிறது.
இந்த மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
0 Comments