கேலோ இந்தியா பாரா விளையாட்டுகளின் போது புதுதில்லியில் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பை அணுகுவதை உறுதி செய்வதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் முதன்மை திட்டமான கேலோ இந்தியாவும் இந்தியாவின் முன்னோடி அணுகல் அமைப்பான ஸ்வயம் அமைப்பும் கைகோர்த்துள்ளன.
1400-க்கும் அதிகமான பாரா-தடகள வீரர்களுக்கு அணுகக்கூடிய போக்குவரத்து சேவைகள் வழங்கப்பட்டன. இந்த 8 நாள் நிகழ்வின் தொடக்கத்தில் 300-க்கும் அதிகமான தன்னார்வலர்கள் மற்றும் விளையாட்டுகளுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
0 Comments