இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
40 நாட்கள் பயணத்திற்கு பிறகு சந்திரயான்-3 விண்களத்தின் லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி நிலவில் பத்திரமாக தரையிறங்கியது. இதனைத் தொடர்ந்து லேண்டரில் இருந்து வெளியே வந்து நிலவில் தரையிறங்கிய ரோவர் தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் இந்த முயற்சிக்குக் கிடைத்த வெற்றியை உலகின் பல்வேறு நாடுகளும் பாராட்டின.இந்த நிலையில் சந்திரயான் 3 வெற்றியை பாராட்டும் விதமாக இஸ்ரோவுக்கு ஐஸ்லாந்து நாடு உயரிய பரிசை வழங்கி கவுரவித்திருக்கிறது.
ஐஸ்லாந்து நாட்டின் ஹூசாவிக் நகர ஆய்வு அருங்காட்சியகம், இஸ்ரோவுக்கு ‘2023- லீப் எரிக்சன் லூனார்’ என்ற உயரிய பரிசை வழங்கியுள்ளது. இதனை இஸ்ரோ சார்பில், ஐஸ்லாந்த் நாட்டுக்கான இந்திய தூதர் பி.ஷியாம் பரிசை பெற்றார்.
0 Comments