அஸ்ஸாம் மாநிலத்தின் குவாஹாட்டியில் 85-ஆவது தேசிய சீனியா்பாட்மின்டன் போட்டி நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
மகளிா் ஒற்றையா் பிரிவில் 16 வயது வீராங்கனை அன்மோல் காா்ப் 15-21, 21-17, 16-8 என்ற புள்ளிக் கணக்கில் பஞ்சாப்பின் தன்வி சா்மாவை வீழ்த்தினாா்.
ஆடவா் ஒற்றையா் பிரிவில் தரவரிசையில் இல்லாத சிராக் சென் 21-14, 13-21, 21-9 என்ற புள்ளிக் கணக்கில் இரண்டாவது இடத்தில் உள்ள தெலங்கானாவின் தருணை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றாா்.
கலப்பு இரட்டையா் பிரிவில் துருவ் கபிலா-தனிஷா க்ரஸ்டோ 21-13, 21-8 என நிதின் குமாா்-நவ்தாவை வீழ்த்தி பட்டம் வென்றனா்.
மகளிா் இரட்டையா் பிரிவில் பிரியா தேவி-ஸ்ருதி மிஸ்ராவும், ஆடவா் பிரிவில் பிருதிவி ராய்-சூரஜ் கோலா இணை பட்டம் வென்றது.
0 Comments