எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி குறித்த அறிக்கை
RANKING OF STATES OF ELECTRONICS EXPORT
TAMIL
எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி குறித்த அறிக்கை / RANKING OF STATES OF ELECTRONICS EXPORT: நடப்பு நிதியாண்டில், ஏப்., முதல் அக்., வரையிலான காலத்தில், இந்தியாவில் இருந்து மாநில வாரியாக, எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி தொடர்பான தரவுகள் வெளியாகியுள்ளன. இந்த காலத்தில், தமிழகம், 39,600 கோடி ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்து, நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது.
மொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு, 31 சதவீதம். இரண்டாம் இடத்தில் உள்ள மாநிலத்தை விட, தமிழகத்தின் ஏற்றுமதி இரு மடங்கு அதிகம். நடப்பு முழு நிதியாண்டில், தமிழகத்தின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி மதிப்பு, 66,400 கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
இது, முந்தைய ஆண்டில், 44,500 கோடி ரூபாயாக இருந்தது.தமிழக அரசின் கொள்கைகள், திறமையான பணியாளர்கள், வலுவான உள்கட்டமைப்பு ஆகியவற்றினால், ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழகத்தின் வளர்ச்சி பாதை வெறும் புள்ளி விபரம் மட்டும் அல்ல, மாநிலத்தின் வளர்ச்சி அடைந்து வரும் சுற்றுச்சூழல் அமைப்புக்கான சான்று.
நடப்பு நிதியாண்டில் அக்., வரை இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி மதிப்பு, 1.28 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அதில், 21,400 கோடி ரூபாய் மதிப்புடன் உ.பி., இரண்டாவது இடத்திலும்; 19,000 கோடி ரூபாயுடன் கர்நாடகா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
ENGLISH
RANKING OF STATES OF ELECTRONICS EXPORT: In the current financial year, from April to October, the state-wise data related to electronics exports from India has been released. During this period, Tamil Nadu topped the country by exporting electronics worth Rs 39,600 crore.
Tamil Nadu's share in total exports is 31 percent. Tamil Nadu's exports are double that of the second ranked state. In the current full financial year, the export value of Tamil Nadu's electronics products is estimated to be Rs 66,400 crore. It was Rs 44,500 crore in the previous year.
Due to Tamil government policies, skilled workforce and strong infrastructure, exports have increased. Tamil Nadu's development path in electronics exports is not just a statistic, it is a proof of the state's growing ecosystem.
In the current financial year till October, the value of India's electronics exports is 1.28 lakh crore rupees. Out of which, UP is in the second place with a value of Rs 21,400 crore; Karnataka is also at the third position with Rs 19,000 crore.
0 Comments