உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் முக்கிய தொடரான விஜய் ஹசாரே தொடர் கடந்த நவம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இந்திய தலைநகரங்களை மையமாகக் கொண்ட 38 அணிகள் இந்த தொடரில் 5 பிரிவுகளின் கீழ் பங்கேற்றது.
ஹரியானா மற்றும் ராஜஸ்தான் அணிகள் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தின. நடைபெற்ற கோப்பைக்கான பைனலில் முதலில் பேட்டிங் செய்த ஹரியானா அணி, தொடக்க வீரர் அன்கிட் குமார் (88 ரன்கள்) மற்றும் கேப்டன் மெனரியாவின் (70) அபாரமான ஆட்டத்தால் 287 ரன்கள் என்ற நல்ல டோட்டலை எட்டியது.
288 ரன்கள் என்ற சற்று கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 257 ரன்னுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ராஜஸ்தான் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
பெரிய நட்சத்திர வீரர்கள் இல்லையென்றாலும் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹரியானா அணி முதல்முறையாக விஜய் ஹசாரே டிரோபியை வென்று வரலாறு படைத்துள்ளது.
0 Comments