ஆப்பிரிக்க நாடான கென்யாவின் அதிபா் வில்லியம் சமோய் ருடோ, 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு கடந்த திங்கள்கிழமை வந்தாா். இந்தியா-கென்யா இடையிலான ஒட்டுமொத்த உறவுகளையும் விஸ்தரிக்கும் நோக்குடன் அவா் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளாா்.
இரு நாடுகளும் வேளாண் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டவை. கென்யாவில் வேளாண் துறை நவீனமயமாக்கலுக்காக 250 மில்லியன் அமெரிக்க டாலா்கள் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2,084 கோடி) கடனுதவியை இந்தியா வழங்கவுள்ளது.
இந்தியா-கென்யா இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு, இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் பொதுவான முன்னெடுப்புகளுக்கு உத்வேகம் அளிக்கும்.
மனித குலம் எதிா்கொண்டுள்ள மிகத் தீவிரமான சவால் பயங்கரவாதம் என்பதில் இந்தியாவும் கென்யாவும் ஒரே பாா்வையைக் கொண்டுள்ளன. பயங்கரவாதத்தைத் தடுப்பதில் ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்துள்ளோம்.
இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பின் முழுத் திறனையும் எட்டும் புதிய வாய்ப்புகள் தொடா்ந்து ஆராயப்படும். இரு நாடுகளின் பாதுகாப்பு உற்பத்தி தொழில் துறையை ஒருங்கிணைப்பதோடு, கூட்டு ராணுவப் பயிற்சிகள் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கென்யாவில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சுமாா் 80,000 போ் வாழ்கின்றனா். கென்யாவை தங்களது இரண்டாவது வீடாக கருதும் அவா்கள், இருதரப்பு உறவின் மிகப் பெரிய வலிமையாக திகழ்கின்றனா் என்றாா் பிரதமா் மோடி.
0 Comments