சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும், தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலியில் சமீபத்தில் பெய்த வரலாறு காணாத கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கும் இந்த நிதி வழங்கப்பட்டது.
ரூ.4.30 கோடிக்கான காசோலையை என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான திரு. பிரசன்ன குமார் மொட்டுபள்ளி இன்று தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர். ஷிவ் தாஸ் மீனா முன்னிலையில் தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வழங்கினார்.
.
.
0 Comments