அயோத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் வளர்ச்சிக்காக சுமார் ரூ.11,100 கோடி மதிப்பிலான திட்டங்களும், உத்தரப்பிரதேசம் முழுவதும் உள்ள மற்ற திட்டங்களுக்கு சுமார் ரூ.4600 கோடி மப்பிலான திட்டங்களும் இதில் அடங்கும்.
இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மறுவடிவமைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தை திறந்து வைத்தார். அதன்பின்னர் இரண்டு அமிர்த பாரத் மற்றும் ஆறு வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதன்படி, ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா-புது டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; அமிர்தசரஸ்-டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; கோவை-பெங்களூரு கான்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; மங்களூர்-மட்கான் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; ஜல்னா-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் அயோத்தி கான்ட்-ஆனந்த் விஹார் டெர்மினஸ் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கவுள்ளது. இந்த 6 வந்தே பாரத் ரயில்களில் 2 ரயில்கள் தெற்கு ரயில்வேயில் இணைந்துள்ளது.
0 Comments