அயோத்திதாச பண்டிதருக்கு முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும் என 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபம் வளாகத்தில் ரூ.2.49 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அயோத்திதாசர் மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். மேலும் மணிமண்டபத்தில் உள்ள அவரது முழு உருவச் சிலையையும் திறந்துவைத்தார்.
0 Comments