சென்னை கோயம்பேடு பகுதி, ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென்மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள வசதியாகவும் 393 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு 'கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்' என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த பேருந்து நிலையத்தினை திறந்துவைத்தார். மேலும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த பேருந்து நிலையத்தினை பேட்டரி காரில் சென்று பார்வையிட்டார் முதல்வர்.
0 Comments