இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் ஆகியோரது நியமனம், பணி நிபந்தனைகளை ஒழுங்குபடுத்தும் மசோதா, மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
தலைமைத் தோ்தல் ஆணையா், பிற தோ்தல் ஆணையா்கள் (நியமனம், பணி நிபந்தனைகள், பதவிக் காலம்) மசோதா-2023, கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 1991-இல் கொண்டுவரப்பட்ட சட்டத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் நியமனம் குறித்து இடம்பெறாத நிலையில், இந்த மசோதா கொண்டுவரப்பட்டது.
0 Comments