TAMIL
செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய கூட்டாண்மை ஆண்டு உச்சி மாநாடு / GLOBAL PARTNERSHIP ON ARTIFICIAL INTELLIGENCE ANNUAL SUMMIT: புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய கூட்டாண்மை (ஜிபிஏஐ) உச்சி மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
உலகளாவிய செயற்கை நுண்ணறிவு கண்காட்சியிலும் பிரதமர் கலந்து கொண்டார். ஜி.பி.ஏ.ஐ என்பது 29 உறுப்பு நாடுகளைக் கொண்ட தொடர்புடையோர் இணைந்த முன்முயற்சியாகும்.
இது செயற்கை நுண்ணறிவு தொடர்பான முன்னுரிமைகளில் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டு நடவடிக்கைகளை ஆதரிப்பதன் மூலம் செயற்கை நுண்ணறிவில் கோட்பாடு மற்றும் நடைமுறைக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் ஜி.பி.ஏ.ஐ.யின் முன்னணி தலைவராக இந்தியா உள்ளது.
ENGLISH
GLOBAL PARTNERSHIP ON ARTIFICIAL INTELLIGENCE ANNUAL SUMMIT: Prime Minister Shri Narendra Modi today inaugurated the Global Partnership on Artificial Intelligence (GPAI) Summit at the Bharat Hall in New Delhi. The Prime Minister also attended the Global Artificial Intelligence Expo. GPAI is a multi-stakeholder initiative of 29 member countries.
It aims to bridge the gap between theory and practice in artificial intelligence by supporting cutting-edge research and applied activities in artificial intelligence-related priorities. India is the leading GPAI in 2024.
0 Comments