2024-25 ஆம் ஆண்டிற்கான கடல்சார் அமைப்பின் நிர்வாகக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது நடைபெற்ற தேர்தலில், இந்தியா அதிக எண்ணிக்கையிலான வாக்குகளுடன் சர்வதேச கடல்சார் அமைப்பின் (ஐ.எம்.ஓ) கவுன்சிலுக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
"சர்வதேச கடல்வழி வர்த்தகத்தில் அதிக ஆர்வம் கொண்ட நாடுகள்" என்ற குழுவில் 10 நாடுகளின் பிரிவில் இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) ஆகிய நாடுகளும் இந்த கவுன்சிலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
0 Comments