Recent Post

6/recent/ticker-posts

விலங்குகளை விண்ணுக்கு அனுப்பிய ஈரான் / IRAN SENT ANIMAL TO SPACE

விலங்குகளை விண்ணுக்கு அனுப்பிய ஈரான் / IRAN SENT ANIMAL TO SPACE
D
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் உள்ள ஈரான், தற்போது விலங்குகளைக் கொண்ட விண்கலன் ஒன்றினை விண்ணுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சுற்றுவட்டப்பாதையில் 130 கிலோமீட்டர் தொலைவுக்கு அந்த விண்கலன் அனுப்பப்பட்டதாகத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் இஸா சரேபூர் தெரிவித்துள்ளார்.

500 கிலோ எடை கொண்ட அந்த விண்கலனில் என்ன விலங்குகள், எத்தனை விலங்குகள் அனுப்பப்பட்டன என்பதைக் குறிப்பிடவில்லை. ஈரான் 2013-ல் விண்கலன் மூலம் குரங்கு ஒன்றினை வெற்றிகரமாக விண்ணுக்குச் சென்றுவரச் செய்ததாகத் தெரிவித்தது. 

கடந்த செப்டம்பர் மாதத்தில், தரவுகளைச் சேகரிக்கும் செயற்கைக்கோள் ஒன்றினை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாகத் தெரிவித்தது. விரைவில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel