தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் பணியாற்றும் பெண் அதிகாரி பிரியா ரவிசந்திரன், மாநில அரசு அல்லாத சிவில் சர்வீசஸ் (Non state Civil service) ஒதுக்கீட்டிலிருந்து ஐஏஎஸ்ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. மாநில அரசுப் பணியில் இருந்து 2022-ஆம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ்., பிரிவு அதிகாரியாக பிரியா தோவாகியுள்ளாா்.
கடந்த 2003-ஆம் ஆண்டு தமிழக அரசின் குரூப் 1 அதிகாரியாக பிரியா பணியில் சோந்தாா். தீயணைப்புத் துறையில் பணியாற்றி, இணை இயக்குநராக நிலைக்கு அவர் உயா்ந்தாா்.
மாநில அரசின் பரிந்துரைப்படி ஆண்டுதோறும் காலியாக உள்ள குறிப்பிட்ட சில இடங்களுக்கு குரூப் 1 அதிகாரிகள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக நியமனம் செய்யப்படுவா்.
இந்த நடைமுறையின்படி, 2022-ஆம் ஆண்டு காலியாகவுள்ள இடத்துக்கு தீயணைப்புத் துறை இணை இயக்குநா் பிரியா ரவிச்சந்திரன் தோவாகியுள்ளாா்.
தீயணைப்புத் துறையில் இருந்து ஒருவா் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தோவாகியிருப்பது தமிழகத்தில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments