மிசோரம் முதல்வராக சோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்துஹோமா இன்று (டிச. 8) பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில், ஆளுர் ஹரிபாபு கம்பம்பட்டி லால்துஹோமவுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
மேலும், 11 மக்கள் இயக்கத்தின் தலைவர்களும் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர். இந்த விழாவில் மிசோரம் தேசிய முன்னணி தலைவரும், முதல்வருமான ஜோரம்தங்கா கலந்துகொண்டார்.
மேலும், எம்எல்ஏக்கள், சட்டமன்றக் கட்சித் தலைவர் லால்சந்தமா ரால்டே உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முன்னாள் முதல்வர் லால் தன்ஹாவ்லாவும் உடனிருந்தார்.
டிசம்பர் 5-ம் தேதி (செவ்வாயன்று) சோரம் மக்கள் இயக்கத்தின் சட்டமன்றக் கட்சி அதன் தலைவராக லால்துஹோமாவையும், துணைத் தலைவராக கே. சப்தங்காவையும் தேர்ந்தெடுத்தனர்.
0 Comments