மத்திய பிரதேசத்தில்., பா.ஜ., 163 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மெஜாரிட்டி பெற 116 இடங்கள் போதும். ஆனால் இமாலய வெற்றியை பா.ஜ., பதிவு செய்து பட்டையை கிளப்பியது.
மத்தியப் பிரதேசத்தில் 4 முறை சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக இருந்த நிலையில், தற்போது மோகன் யாதவை புதிய முதல்வராக பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர்.
இந்நிலையில், போபாலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவுக்கு அம்மாநில கவர்னர் மங்குபாய் சாகன்பாய் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அவருடன் துணை முதல்வர்கள் ராஜேந்திர சுக்லா மற்றும் ஜெகதீஷ் தேவ்தா ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நட்டா, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, நிதின் கட்கரி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தேவ் சாய் இன்று பதவியேற்றார். இதற்கான விழாவிலும் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
0 Comments