தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தரை நியமித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகத்தின் புதிய துணை வேந்தராக பேராசிரியர் பெலிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் 3 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார். பேராசிரியர் பெலிக்ஸ், 32 ஆண்டுகள் கல்வி மற்றும் நிர்வாக பணியில் அனுபவம் வாய்ந்தவர். மீன்வள பல்கலைக் கழகத்தின் பொறுப்பு துணை வேந்தராகவும் இருந்து வருகிறார்.
0 Comments