125 ஆண்டுகள் பழைமையான இந்திய தபால் அலுவலக சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டத்தைக் கொண்டுவரும் வகையில், தபால் அலுவலக மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த மசோதாவின்படி நாட்டின் பாதுகாப்பு, வெளிநாடுகள் உடனான நட்புறவு, அவசரநிலை, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்ட மீறல் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, தபால் அலுவலகம் மூலம் அனுப்பப்படும் கடிதம், பொருள் உள்ளிட்டவற்றை இடைமறிக்க, திறந்து பாா்க்க அல்லது நிறுத்திவைக்க எந்தவொரு அதிகாரிக்கும் மத்திய அரசு அதிகாரம் வழங்கலாம்.
கடந்த டிச.4-ஆம் தேதி இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடா்ந்து அந்த மசோதா குறித்து மக்களவையில் திங்கள்கிழமை விவாதம் நடைபெற்றது.
நாடாளுமன்றப் பாதுகாப்பு விவகாரம் தொடா்பாக எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதற்கு இடையே, விவாதம் சுருக்கமாக நடைபெற்று மசோதா நிறைவேற்றப்பட்டது.
0 Comments