Recent Post

6/recent/ticker-posts

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட் - மத்திய அரசு நடவடிக்கை / Suspension of Wrestling Federation of India - Central Govt Notification

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட் - மத்திய அரசு நடவடிக்கை / Suspension of Wrestling Federation of India - Central Govt Notification

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக இருந்த பா.ஜ., எம்.பி., பிரிஜ் பூஷன் சிங், பாலியல் புகாரில் சிக்கினார். இவருக்கு எதிராக, மல்யுத்த நட்சத்திரங்கள் வினேஷ் போகத், சாக் ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். 

இதனிடையே சமீபத்தில் நடந்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலில் பிரிஜ் பூஷன் ஆதரவாளர்கள் மொத்தமுள்ள 15 பதவிகளில் 13ல் வெற்றி பெற்றனர். பிரிஜ் பூஷனுக்கு நெருக்கமான சஞ்சய் சிங் தலைவர் ஆனார். இதற்கு மல்யுத்த வீரர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.

சாக்ஷி மாலிக் மல்யுத்த போட்டியில் இருந்து விலகினார். பஜ்ரங் புனியா ' பத்ம ஸ்ரீ விருதை திருப்பி கொடுத்தார். வீரேந்தர் சிங்கும் ' பத்ம ஸ்ரீ' விருதை திருப்பித் தர முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வான சஞ்சய் சிங், 15 மற்றும் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிகள் உ.பி.,யின் கோண்டாவில் உள்ள நந்தினி நகரில் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.

இதனிடையே, இந்திய மல்யுத்த கூட்டமைப்பை, மத்திய அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. கூட்டமைப்பிற்கு தேர்வான அனைவரும் பிரிஜ் பூஷன் கட்டுப்பாட்டில் தான் உள்ளனர் என தெரிவித்துள்ள மத்திய அரசு, கூட்டமைப்பின் விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel