கோயம்புத்தூர் எஸ்.என்.ஆர். கல்லூரி கலையரங்கத்தில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 27 மற்றும் 28வது வார்டு பகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அதற்கான ஒப்புகை சீட்டுகளை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
அதேநேரத்தில் தமிழக அமைச்சர்கள் அவர்களுடைய மாவட்டங்களிலும், பொறுப்பு அமைச்சர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களிலும் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
0 Comments