லட்சத்தீவின் கவரட்டியில் ரூ.1150 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொழில்நுட்பம், எரிசக்தி, நீர்வளம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பரந்த அளவிலான துறைகளில் திட்டங்கள் தொடங்கப்பட்டன. மடிக்கணினி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கிய பிரதமர், பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
விவசாயிகள், மீனவர் பயனாளிகளுக்கு பிரதமர் வேளாண் கடன் அட்டைகளையும் அவர் வழங்கினார். கொச்சி-லட்சத்தீவுகளின் நீர்மூழ்கி கண்ணாடி இழை இணைப்பு திட்டத்தை லட்சத்தீவின் கவரட்டியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் இணைய வேகத்தை அதிகரிக்க வழிவகுக்கும், சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் மூலம் லட்சத்தீவு இணைக்கப்படும்.
விரைவான, நம்பகமான இணைய சேவைகள், தொலை மருத்துவம், மின் நிர்வாகம், கல்வி முன்முயற்சிகள், டிஜிட்டல் வங்கி, டிஜிட்டல் நாணய பயன்பாடு, டிஜிட்டல் கல்வியறிவு போன்றவற்றிற்கு இது பயனளிக்கும்.
0 Comments