இந்தியா - அமெரிக்கா வர்த்தகக் கொள்கை மன்றத்தின் அமைச்சர்கள் அளவிலான 14 வது கூட்டம் (டிபிஎஃப் ) 2024 ஜனவரி 12, அன்று புதுதில்லியில் நடைபெற்றது.
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி தூதர் கேத்ரின் டாய் ஆகியோர் டிபிஎஃப் கூட்டத்திற்கு இணைத் தலைமை வகித்தனர்.
பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர், அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதி தூதர் கேத்ரின் டாய் உடன் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஒரு சிறிய குழு கூட்டத்தையும் நடத்தியது.
இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்துவதிலும், நாடுகளுக்கு இடையிலான ஒட்டுமொத்த பொருளாதார கூட்டாண்மையை உயர்த்துவதிலும் டிபிஎஃப்- ஐ திறம்பட செயல்படுத்துவது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அமைச்சர்கள் எடுத்துரைத்தனர். கூட்டத்திற்குப் பிறகு கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments