பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் கூட்டு முயற்சி மூலம் இசிஎல் கட்டுப்பாட்டு பகுதியில் நிலக்கரியிலிருந்து செயற்கையான இயற்கை எரிவாயு திட்டத்தை அமைப்பதற்கான கோல் இந்தியா நிறுவனத்தின் பங்கு முதலீட்டிற்கான முன்மொழிவு, கோல் இந்தியா & பெல் நிறுவனத்தின் கூட்டு முயற்சி மூலம் எம்சிஎல் கட்டுப்பாட்டு பகுதியில் நிலக்கரியிலிருந்து அம்மோனியம் நைட்ரேட் திட்டத்தை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் பங்கு மூலதனம் ரூ.1,997.08 கோடி கடன்-சமபங்கு விகிதம் 70:30 என்ற விகிதத்தைக் கருத்தில் கொண்டு, மற்றும் ரூ.13,052.81 கோடி திட்ட மூலதன செலவு மதிப்பீட்டுடன் கூட்டு முயற்சி நிறுவனத்தில் 51% பங்கு முதலீடு மேற்கு வங்கத்தின் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனம் சோன்பூர் பஜாரி பகுதியில் முன்மொழியப்பட்டுள்ள நிலக்கரியிலிருந்து செயற்கையான இயற்கை எரிவாயு திட்டம் மூலதன செலவு மூலம் கோல் இந்தியா நிறுவனம் மற்றும் கெயில் நிறுவனத்தின் கூட்டு முயற்சி மூலம் மேற்கொள்ளப்படும்.
0 Comments