Recent Post

6/recent/ticker-posts

2023ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருது / Best FIFA Football Awards 2023

2023ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருது
Best FIFA Football Awards 2023

2023ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருது / Best FIFA Football Awards 2023

TAMIL

2023ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருது / Best FIFA Football Awards 2023: சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ஆண்டு தோறும் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கெளரவிப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர் என்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

இதில் மெஸ்ஸி மற்றும் நார்வே மற்றும் மான்செஸ்டர் சிட்டி வீரர் எர்லின் ஹாலாந்து இடையே கடும் போட்டி நிலவியது. இதில் இருவரும் 48 புள்ளிகளுடன் சமமான நிலையில் இருந்தனர்.

இதில் தேசிய கால்பந்து அணிகளின் கேப்டன் அளித்த வாக்கின் மூலம் ஹாலாந்தை விட கூடுதலாக 5 புள்ளிகள் பெற்று மெஸ்ஸி 2023ம் ஆண்டின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். 2வது வீரராக எர்லிங் ஹாலண்ட் மற்றும் மூன்றாவது இடத்தை கைலியன் எம்பாப்பே பெற்றுள்ளார்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பிரான்ஸ் விளையாட்டு பத்திரிகையின் தங்கப்பந்து விருதை 8 முறை கைப்பற்றி மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அதேபோல், 2023ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீராங்கனையாக அய்ட்னா பொன்மாட்டி தேர்வு செயப்பட்டுள்ளார். ஸ்பெயின் தேசிய அணிக்காவும், மகளிர் பார்சிலோனா அணிக்காகவும் விளையாடி வரும் இவர் முதல் முறையாக சிறந்த கால்பந்து வீராங்கனை என்ற பட்டத்தை வென்றுள்ளார். அதேபோல், இந்த ஆண்டின் தங்கப்பந்து விருதையும் அவர் கைப்பற்றியுள்ளார்.

ENGLISH

Best FIFA Football Awards 2023: Every year, the International Football Confederation (FIFA) honors the best players by giving awards. The player of the year poll was conducted. There was a fierce competition between Messi and Norwegian and Manchester City player Erlin Holland. Both were tied on 48 points.

Messi was chosen as the best player of the year 2023 by getting 5 more points than Holland by the vote given by the captain of the national football teams. Erling Holland is the 2nd player and Kylian Mbappe is the 3rd.

He has been selected for this award for the second time in a row. It is also noteworthy that Messi has already won the Ballon d'Or award of the French sports magazine 8 times. Similarly, Aydna Ponmati has been selected as the best football player of 2023. 

Playing for the Spanish national team and Barcelona women's team, she has won the title of best soccer player for the first time. Also, he has won the Ballon d'Or award of the year.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel