மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்த 2023-ம் ஆண்டுக்கான தூய்மை ஆய்வு விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று வழங்கினார்.
அதன்படி, தூய்மையான நகரங்கள், தூய்மையான ராணுவக் குடியிருப்பு, நகர தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பு, கங்கா நகரங்கள், சிறப்பாகச் செயல்படும் மாநிலம் ஆகிய பிரிவுகளின் கீழ் விருது பெற்ற 13 பேர் பாராட்டப்பட்டனர்.
இந்த ஆண்டு தூய்மையான நகரத்திற்கான முதல் விருதை துறைமுக நகரமான சூரத், 6 ஆண்டுகளாகத் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்த இந்தூருடன் இணைந்து பெற்றது.
இந்த பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக ம.பி.,யின் இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது. இந்தூருடன் குஜராத்தின் சூரத் நகரமும் முதலிடத்தை பகிர்ந்து கொண்டு உள்ளது.
3வது இடத்தை மஹாராஷ்டிராவின் நவி மும்பையும் 4வது இடத்தை ஆந்திராவின் விசாகப்பட்டினமும் 5வது இடத்தை ம.பி.,யின் போபாலும் 6வது இடத்தை ஆந்திராவின் விஜயவாடாவும் 7 வது இடத்தை டில்லி மாநகராட்சியும் 8 வது இடத்தை ஆந்திராவின் திருப்பதியும் 9 வது இடத்தை தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரமும்10வது இடத்தை மஹாராஷ்டிராவின் புனே நகரமும் பிடித்துள்ளன. தூய்மையான மாநிலங்களில் மஹாராஷ்டிரா, ம.பி., மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை முதல் 3 இடங்களை பிடித்துள்ளன.
ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பிரிவில், சஸ்வத், பதான், லோனாவாலா ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மோவ் ராணுவக் குடியிருப்பு வாரியம் தூய்மையான ராணுவக் குடியிருப்பு வாரியமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தூய்மையான கங்கை நகரங்களில் வாரணாசி, பிரயாக்ராஜ் ஆகியவை முதல் இரண்டு விருதுகளைப் வென்றுள்ளன. சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களுக்கான முதல் மூன்று விருதுகளை மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் வென்றன. மொத்தம் 110 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
0 Comments