என்.எல்.சி.,க்கு 'ஸ்கோப் எமினென்ஸ்' விருது 2024
Scope Eminence Award 2024 for NLC
TAMIL
என்.எல்.சி.,க்கு 'ஸ்கோப் எமினென்ஸ்' விருது 2024 / Scope Eminence Award 2024 for NLC: மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் உயரிய அமைப்பான 'ஸ்கோப் ' சார்பில் ஆண்டுதோறும் சிறந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விருது முன்னாள் தலைமை நீதிபதி தலைமையிலான குழுவால் மதிப்பிடப்படுகிறது. இவ்விருது கடுமையானபோட்டி செயல்முறைகள் மூலம் நிர்ணயிக்கப்பட்டு பொதுத்துறை நிறுவனங்களின் சிறந்த சாதனைகள் நிறுவன வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த தேசிய பொருளாதாரத்தில் ஆற்றிய பங்களிப்பு ஆகியவற்றிற்காக வழங்கி கவுரவித்து வருகிறது.
இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழா புதுடில்லியில் நடந்தது. துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் தலைமை தாங்கினார். டிஜிட்டல் மாற்றத்திற்கான பிரிவில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சாதனை புரிந்தமைக்காக ' ஸ்கோப் எமினென்ஸ் விருது ' வழங்கப்பட்டது.
விருதினை என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும்செயலாக்கத்துறை இயக்குநர் மோகன் ரெட்டி மற்றும் முதன்மை பொதுமேலாளர் சாலமன் லுாதர்கிங் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
ENGLISH
Scope Eminence Award 2024 for NLC:The award for the best public sector organizations is given annually by 'Scope', the apex body of central public sector organizations. The award is judged by a committee headed by a former Chief Justice.
The award is determined through a rigorous competitive process and honors outstanding achievements of public sector organizations for their contribution to organizational growth and the overall national economy. The award ceremony for this year was held in New Delhi.
Vice President Jakdeep Dhankar presided. NLC in the category of digital transformation. India was awarded the 'Scope Eminence Award' for corporate achievement. Mohan Reddy, Director, Projects and Operations, NLC India and Salomon Luther King, Principal General Manager received the award.
0 Comments