பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் புத்தாக்க தனித்துவ செயல்விளக்க (சாண்ட்பாக்ஸ்) நிகழ்வில் பங்கேற்றது. நில நிர்வாக அமைப்புகளை வெளிப்படையாகவும் திறமையாகவும் டிஜிட்டல் மயமாக்கும் செயல்முறைகளை "ஸ்வாமித்வா திட்டம்" நடைமுறைப்படுத்துகிறது.
இதன் மூலம் நில நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. 2024ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை ஹைதராபாத்தில் நடைபெற்ற வருடாந்திர மூன்று நாள் "பொதுக் கொள்கை உரையாடல்கள்" மாநாட்டில் "ஸ்வாமித்வா திட்டத்தின் மூலம் நில நிர்வாகத்தில் டிஜிட்டல் மாற்ற முன்முயற்சிகள்" என்ற செயல்விளக்கத்திற்காக பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்கு மதிப்புமிக்க முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்வமித்வா திட்டத்தை செயல்படுத்துவதில் செயல்திறன் மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதற்காக தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் புதுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
2023 அக்டோபரில் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் நிர்வாக சீர்திருத்தங்கள் துறை (டி.ஏ.ஆர்.பி.ஜி) ஏற்பாடு செய்த "மக்களை மையமாகக் கொண்ட சேவைகளை வழங்க வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்" என்ற பிரிவில் ஸ்வமித்வா திட்டம் 2023 ஆம் ஆண்டிற்கான மின் ஆளுமைக்கான தேசிய விருதுகளில் மதிப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்றது.
ஆகஸ்ட் 2023-ல் கோவாவில் ஏற்பாடு செய்யப்பட்ட டிஜிடெக் மாநாடு 2023-ல் "டிஜிட்டல் மாற்றத்திற்கான மின் ஆளுமையில் தொழில்நுட்பத்தின் புதுமையான பயன்பாடு" என்ற பிரிவில் தங்கப் பதக்கத்தையும் ஸ்வாமித்வா திட்டம் பெற்றது.
0 Comments