மொத்தம் 18 நாடுகள் பங்கேற்ற இத்தொடரின் 2வது சீசன் பைனலில் போலந்து – ஜெர்மனி அணிகள் மோதின. மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் உலகின் நம்பர்-1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் 6-3, 6-0 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை எளிதில் வீழ்த்தி போலந்துக்கு முதல் வெற்றியை பெற்றுத் தந்தார்.
ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ் (2வது ரேங்க்) போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்சை (9வது ரேங்க்) 6-7 (3-7), 7-6 (8-6), 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்த 1-1 என சமநிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, கலப்புர் இரட்டையர் ஆட்டத்தில் போலந்தின் இகா ஸ்வியாடெக்/ஹூபர்ட் ஹர்காக்ஸ் ஜோடியுடன் ஜெர்மனி தரப்பில் லாரா சீஜ்மண்ட் – அலெக்சாண்டர் ஸ்வெரவ் இணை மோதியது.
மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் ஜெர்மனி இணை 6-4, 5-7, 10-4 என்ற செட் கணக்கில் போராடி வென்றதை அடுத்து, ஜெர்மணி 2-1 என்ற கணக்கில் போலந்தை வீழ்த்தி யுனைட்டட் கோப்பையை முத்தமிட்டது.
0 Comments