Recent Post

6/recent/ticker-posts

ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் சூரிய நமஸ்காரம் - கின்னஸ் சாதனை / 4 thousand people perform Surya Namaskar at the same time - Guinness record

ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் சூரிய நமஸ்காரம் - கின்னஸ் சாதனை / 4 thousand people perform Surya Namaskar at the same time - Guinness record

குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திரபாய் பட்டேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள மோதரா சூரியக் கோவிலில் புத்தாண்டையொட்டி காலையில் 4 ஆயிரம் பேர் சேர்ந்து ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பூபேந்திரபாய் பட்டேல் கலந்து கொண்டார்.

இந்த சாதனை நிகழ்ச்சி பற்றி பிரதமர் மோடி, குஜராத் 2024 ஆம் ஆண்டை ஒரு குறிப்பிட்ட சாதனையுடன் வரவேற்றுள்ளது. 108 இடங்களில் ஒரே நேரத்தில் அதிக மக்கள் சூரிய நமஸ்காரத்தில் பங்கேற்று உலக சாதனை படைத்துள்ளனர். நமக்கு தெரிந்தபடி, 108 என்ற எண் நமது கலாச்சாரத்தில் ஒரு முக்கியமானது. அதில், மோதரா சூரியக் கோயிலும் அடங்கும். 

இங்கு அனைத்து மக்களும் ஒன்றுகூடி உலக சாதனை படைத்துள்ளனர். இது நமது நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான அர்ப்பணிப்பிற்கு ஒரு சான்று. இந்த சூரிய நமஸ்காரத்தை உங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆக்கிக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel