கேரள மாநிலத்திற்கு 2 நாள் பயணமாக வந்துள்ள பிரதமர் மோடி குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், குருவாயூர் கோயிலில் நடந்த முன்னாள் பாஜக எம்பியான நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து கொச்சியின் வில்லிங்டன் தீவில் ரூ.4,000 கோடி மதிப்பிலான கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் சர்வதேச கப்பல் பழுதுபார்க்கும் மையம் மற்றும் புதிய கப்பல்துறையைப் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
0 Comments