Recent Post

6/recent/ticker-posts

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - 43 வயதில் சாம்பியன் பட்டம் வென்ற ரோஹன் போபண்ணா / Australian Open Tennis - Rohan Bopanna who won the title at the age of 43

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - 43 வயதில் சாம்பியன் பட்டம் வென்ற ரோஹன் போபண்ணா / Australian Open Tennis - Rohan Bopanna who won the title at the age of 43

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடைபெறுகிறது. 

இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி - இத்தாலியின் சைமன் பொலேலி, ஆண்ட்ரியா வவாசூரி ஜோடியுடன் மோதியது.

இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-0), 7-5 என்ற செட்களில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இரட்டையர் பிரிவில் 43 வயதாகும் போபண்ணா முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்றுள்ளார். அதிக வயதில் கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்றவர் ரோஹன் போபண்ணா என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel