மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான ஊரக மின்மய நிறுவனம் (ஆர்.இ.சி) 61.1 பில்லியன் ஜப்பானிய யென் (ஜே.பி.ஒய்) மதிப்பிலான 5 ஆண்டு, 5.25 ஆண்டு மற்றும் 10 ஆண்டுக்கான, அதன் முதலாவது பசுமைப் பத்திரங்களை வெளியிட்டுள்ளது.
பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருமானம், இந்நிறுவனத்தின் பசுமை நிதிக் கட்டமைப்பு, ரிசர்வ் வங்கியின் வெளிநாட்டு வணிகக் கடன் வழிகாட்டுதல்கள் மற்றும் அவ்வப்போது வழங்கப்படும் ஒப்புதல்களுக்கு இணங்க தகுதிவாய்ந்த பசுமைத் திட்டங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும்.
பரிவர்த்தனையின் முக்கிய அம்சங்கள்
சர்வதேசப் பத்திர சந்தையில் ஆர்.இ.சி நிறுவனத்தின் பதினோராவது முயற்சி மற்றும் தொடக்க யென் பத்திர வெளியீடு, இது இந்திய பொதுத்துறை நிறுவனம் வெளியிடும் முதலாவது யென் பசுமைப் பத்திரம் ஆகும்.
5 ஆண்டு, 5.25 ஆண்டு மற்றும் 10 ஆண்டு பத்திரங்கள் முறையே 1.76%, 1.79% மற்றும் 2.20% லாபத்தில் வெளியிடப்படுகின்றன.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய யூரோ-யென் வெளியீடு
இந்தியாவிலிருந்து மிகப் பெரிய யென்-குறியீட்டு வெளியீடு
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து இதுவரை இல்லாத மிகப்பெரிய யென்-குறியீட்டு வெளியீடு
இந்தப் பரிவர்த்தனை ஜப்பானிய மற்றும் சர்வதேச கணக்குகள் இரண்டிலிருந்தும் ஆர்வத்தைக் கண்டது, ஒவ்வொன்றிலிருந்தும் ஆர்டர்களின் எண்ணிக்கை 50% ஆக இருந்தது, சர்வதேச ஒதுக்கீடு வேறு எந்த இந்திய யென் ஒப்பந்தத்திற்கும் மிக உயர்ந்த ஒன்றாகும்.
0 Comments