சென்னை காமராஜர் சாலை, உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 8 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடியை பறக்கவிட்டார்.
தொடர்ந்து குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.முன்னதாக காலை 7.50 மணி அளவில் போக்குவரத்து காவல் படையினரின் வாகன அணிவகுப்புடன் முதல்வர் ஸ்டாலின் வந்தார்.
அவரை தொடர்ந்து ஆளுநர் ரவி, ராணுவ வாகன அணிவகுப்புடனும் விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றும்போது, ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டது.
அத்துடன் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை, தமிழக காவல் துறை , தேசிய மாணவர் படை, வனம், சிறை, தீயணைப்பு துறைகளின் படைப்பிரிவினர், பள்ளி, கல்லூரி பேண்டு வாத்திய குழுவினர், சாரண, சாரணியர், ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
0 Comments