ஜுபிடர் வாகனங்கள் நிறுவனத்துடன் 473 கோடி ரூபாய் செலவில் க்யூடி-697 போகி ஓபன் மிலிட்டரி (பிஓஎம்) வாகனங்கள் வாங்குவதற்கும், பை (இந்தியன்-ஐடிடிஎம்) பிரிவின் கீழ் 329 கோடி ரூபாய் செலவில் க்யூட்டி-56 மெக்கானிக்கல் மைன்ஃபீல்டு மார்க்கிங் உபகரணம் – 2 (எம்எம்எம்இ) கொள்முதல் செய்வதற்கும் பாதுகாப்பு அமைச்சகம் புதுதில்லியில் 2024, ஜனவரி 4 அன்று இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
பிஓஎம் வாகனங்கள், எம்எம்எம்இ ஆகியவை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்பட்ட உபகரணங்கள் மற்றும் துணை அமைப்புடன் தயாரிக்கப்படும்.
இது உள்நாட்டு உற்பத்தி, பாதுகாப்பு உற்பத்தியில் தனியார் துறையின் பங்கேற்பை ஊக்குவித்து, தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும்.
ஆராய்ச்சி வடிவமைப்பு தரநிலை அமைப்பு (ஆர்.டி.எஸ்.ஓ) வடிவமைத்த போகி ஓபன் மிலிட்டரி (பி.ஓ.எம்) வாகனங்கள், ராணுவ குழுக்களை அணிதிரட்டுவதற்கு இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்படும் சிறப்பு வாகனங்கள் ஆகும்.
இலகுரக வாகனங்கள், பீரங்கி துப்பாக்கிகள், பி.எம்.பி.க்கள், பொறியியல் உபகரணங்கள் போன்றவற்றை அவற்றின் இடங்களிலிருந்து செயல்பாட்டு பகுதிகளுக்கு கொண்டு செல்ல பிஒஎம் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
0 Comments