ஒடிசா கடற்கரையில், நவீன தலைமுறையைச் சேர்ந்த ஆகாஷ் (ஆகாஷ் என்.ஜி) ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. இது மிக குறைந்த உயரத்தில், அதிவேக ஆளில்லா வான்வெளி இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.
இந்த ஏவுகணை சோதனையை ஒடிசாவின் பாலசோர் கடற்கரையில் டிஆர்டிஓ வெற்றிகரமாக செய்தது. இந்த ஏவுகணை செயல்பாடுகள் ஐடிஆர் சண்டிபூர் அமைத்த ரேடார், டெலிமெட்ரி மற்றும் எலக்ட்ரோ ஆப்டிகல் டிராக்கிங் அமைப்புகள் சேகரித்த தரவுகள் மூலம் சரிபார்க்கப்பட்டது.
0 Comments