Recent Post

6/recent/ticker-posts

ஹைட்ரோகார்பன் துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் கயானா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் /

ஹைட்ரோகார்பன் துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் கயானா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் /

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஹைட்ரோ கார்பன் துறையில் பரஸ்பரம் ஒத்துழைப்பு நல்குவது தொடர்பாக மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மற்றும் கயானா குடியரசின் இயற்கை வள அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக, கயானாவில் இருந்து கச்சா எண்ணெயைப் பெறுதல், கயானாவின் ஆய்வு மற்றும் உற்பத்தித் துறையில் இந்திய நிறுவனங்களின் பங்கேற்பு, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, திறன் மேம்பாடு, இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்துதல், இயற்கை எரிவாயு துறையில் ஒத்துழைப்பு, கயானாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் ஒழுங்குமுறை கொள்கை கட்டமைப்பை உருவாக்குவதில் ஒத்துழைப்பு உள்ளிட்ட ஹைட்ரோகார்பன் துறையின் முழுமையான அம்சங்களை உள்ளடக்கியது.

உயிரி எரிபொருள் உள்ளிட்ட தூய்மையான எரிசக்தி மற்றும் சூரிய சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பு ஆகியவையும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கியுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel