மத்திய நேரடி வரிகள் வாரியம் நேரடி வரி வசூல் மற்றும் நிர்வாகம் தொடர்பான முக்கிய புள்ளி விவரங்களை அவ்வப்போது பொது தளத்தில் வெளியிட்டு வருகிறது.
மேலும் தகவல்களை பொது தளத்தில் வைப்பதற்கான அதன் முயற்சிகளின் தொடர்ச்சியாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் 2022-23 நிதியாண்டு வரை புதுப்பிக்கப்பட்ட ஒருங்கிணைந்த கடந்த கால ஒப்பீடுகளுடன் கூடிய தரவை வெளியிட்டுள்ளது.
2013-14 நிதியாண்டில் ரூ.6,38,596 கோடியாக இருந்த நிகர நேரடி வரி வசூல் 2022-23 நிதியாண்டில் ரூ.16,63,686 கோடியாக 160.52% அதிகரித்துள்ளது.
2022-23 நிதியாண்டில் ரூ.19,72,248 கோடியாக இருந்த மொத்த நேரடி வரி வசூல், 2013-14 நிதியாண்டில் ரூ.7,21,604 கோடியாக இருந்த மொத்த நேரடி வரி வசூலுடன் ஒப்பிடுகையில் 173.31% அதிகரித்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நேரடி வரி விகிதம் 2013-14 நிதியாண்டில் 5.62% ஆக இருந்தது, 2022-23 நிதியாண்டில் 6.11% ஆக அதிகரித்துள்ளது.
2013-14 நிதியாண்டில் மொத்த வசூலில் 0.57% ஆக இருந்த வசூல் செலவு 2022-23 நிதியாண்டில் மொத்த வசூலில் 0.51% ஆக குறைந்துள்ளது.
2022-23 நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த வருமான வரித் தாக்கலின் எண்ணிக்கை 7.78 கோடியாக உள்ளது, இது 2013-14 நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட 3.80 கோடி வருமான வரித் தாக்கலின் மொத்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 104.91% அதிகரித்துள்ளது.
0 Comments