Recent Post

6/recent/ticker-posts

ஜல்லிக்கட்டு அரங்கத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் / Chief Minister Stalin inaugurated the Jallikattu Stadium

ஜல்லிக்கட்டு அரங்கத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின் / Chief Minister Stalin inaugurated the Jallikattu Stadium

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் 62.78 கோடி செலவில் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இதனைத் தொடர்ந்து காலை 11.10 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

பின்னர் ஆன்லைன் டோக்கன் எண் வரிசையின் அடிப்படையில் வாடிவாசலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. முதல்வர் ஸ்டாலின் சில நிமிடங்கள் போட்டியைக் கண்டு ரசித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

500 காளைகளும், 200 மாடுபிடி வீரர்களும் களம் காண போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போட்டி தொடங்குவதற்கு. முன்பாகவே காளைகளுக்கும், வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஜல்லிக்கட்டு களத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இப்போட்டியில் சிறந்த காளைக்கும், சிறந்த மாடுபிடி வீரருக்கும் தமிழக அரசு சார்பில் தலா 1 மகேந்திரா தார் ஜீப் காரும், 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் பரிசாக வழங்கப்படுகிறது. 2வது பரிசு பெறும் காளைக்கும், வீரருக்கும் தலா ஒரு பைக் 50ஆயிரம் ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel