உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் பிரதிஷ்டை கோலாகலமாக இன்று 12.30-க்கு நடைபெற்றது. அயோத்தியில் குழந்தை ராமரின் கண்களில் மூடப்பட்டிருந்த மஞ்சள் நிற துணி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அகற்றப்பட்டது.
குழந்தை ராமர் சிலை திறக்கப்பட்ட போது ராமர் கோயிலின் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. அயோத்தி ராமர் கோயிலில் ஸ்ரீபால ராமர் சிலை பிராண பிரதிஷ்டை பூஜைகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்று செய்தார். அவருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அமர்ந்திருந்தார்.
குழந்தை ராமர் சிலையின் பாதத்தில் தாமரை மலர்களைத் தூவி பிரதமர் மோடி வணங்கினார். நகைகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும் குழந்தை ராமர் சிலையின் முன்பு பிரதமர் மனமுருகப் பிரார்த்தனை செய்தார்.
ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம் என்று உணர்ச்சி பொங்க மக்கள் கோஷமிட்டு குழந்தை ராமரைப் பிரார்த்தனை செய்தனர். அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஆயிரக்கணக்கான முக்கியத் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் பாலராமர் பிரதிஷ்டையில் பங்கேற்றுள்ளனர். வண்ண விளக்குகளால் மிளிரும் அயோத்தியில் பாதுகாப்புக்காக நகரம் முழுவதும் 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
0 Comments